பழனியில் தொலைநிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை மையம் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லிரியில் மாணவர் சேர்க்கை மையத்தை திறந்துவைத்தார் பல்கலைக்கழக டீன்.

பழனியில்  தொலைநிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை மையம் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இயங்கிவரும்.  மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரியில், தொலைநிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கை மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. 

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழக டீன் முனைவர்.சதாசிவம், பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநர் முனைவர்.இராமசாமி, முன்னாள் பதிவாளர் முனைவர் அழகப்பன்,  தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்று தொலைநிலைக் கல்விக்கான சேர்க்கை மையத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். 

கடந்த 20 ஆண்டுகளாக பழனி நகரில் சிறப்புடன் இயங்கி வரும் மாலை நேரக் கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் தொலைதூர கல்விக்கான மாணவர் சேர்க்கை மையமும் கூடுதலாக அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த மையத்தில் பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சேர்க்கை மைய தொடக்க விழாவில், பழனி மாலை நேரக் கல்லூரியின் இயக்குநர் முனைவர்.தயாளகிருஷ்ணன், இருபால் பேராசிரியர்கள், அனைத்துத் துறைசார்ந்த மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில், பழனி நகரில் இயங்கி வரும் அதிகாரப்பூர்வ  மாணவர் சேர்க்கை மையம் இது மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

வி.காளமேகம் - செய்தியாளர்