3கி.மீ தூரம் 3500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி!

காஞ்சிபுரத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த விழிப்புணர்வு பேரணி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

3கி.மீ தூரம் 3500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளை சார்ந்த 3500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் துவங்கி நான்கு ராஜவீதி வழியாக பேரூந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

சுமார் 3கி.மீ தூரம் நடந்த இந்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.