எண்ணூர் அசோக் லேலண்ட் கம்பனியின் கான்ட்ராக்டரை மிரட்டி மாமுல் கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை...

வடசென்னை எண்ணூரில் இருக்கும் அசோக் லேலண்ட் கம்பெனியில் கான்ட்ராக்டர் ஒருவரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் மாமும் கேட்டதால், கான்ட்ராக்டர் போலீசில் புகார். போலீசார் விசாரணை.

எண்ணூர்  அசோக் லேலண்ட் கம்பனியின் கான்ட்ராக்டரை மிரட்டி மாமுல் கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை...

வடசென்னை எண்ணூர் பகுதியில், கனரக வாகனங்களுடைய உதிரிபாகங்கள் தயாரிக்க கூடிய அசோக் லைலேண்ட் என்ற தனியார் நிறுவனம்  பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக உருக்கு ஆலை ஒன்றும் (ஃபவுண்டரீ) அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக அதே பகுதியில்  இயங்கி வருகிறது. 

அதில், இரும்பு மற்றும் மற்றும் காஸ்டிங் போன்ற பல விதமான வேதி பொருட்களை கலந்து உருக்கி அதிலிருந்து வாகனங்களுடைய உதிரிபாகங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அந்த கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியேற்ற கூடிய கருப்பு மண் கழிவுப் பொருளை அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது லாரிகள் மூலம் எடுத்து அப்புறப்படுத்த கூடிய ஒப்பந்தத்தை செய்து வருகிறார். 

இந்நிலையில், அவர்  ஆவடி காவல் ஆணையர் அவர்களிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில், "கடந்த பல வருடங்களாக நான் இந்த கம்பெனியில் எந்த விதமான கெட்ட பெயரும், பிரச்சினைகளும் இல்லாமல் தனது லாரிகளை வைத்து ஒப்பந்த தொழிலை சிறப்பாக நடத்தி வந்த நிலையில், நான் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வரும் அசோக் லேலண்ட் கம்பெனியில் தொழிற்சங்க நிர்வாகிகளாக இருக்க கூடிய  முரளி மனோகரன், தம்பிதுரை, நந்தகுமார், கிரீஸ் என்ற நபர்கள் தன்னை மிரட்டி மாமுல் கேட்டு மிரட்டுகின்றனர்.

அதை சரவணன் கொடுக்காததால், கம்பெனியில் இருந்து கழிவு பொருட்களை ஏற்றி செல்லும் லாரியில் இரும்பு பொருட்களை அவர்களே போட்டுவிட்டு தன்னுடைய காண்ட்ராக்ட் தொழிலை கெடுக்கும் வகையில் சீர்குலைத்து விட்டனர்," என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

சரவணன் அளித்த புகார் குறித்து எண்ணூர் காவல் நிலைய அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகளான அந்த நான்கு பேரையும் காவல்நிலையதிற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிழல்.இன் / 8939476777