சேலம் மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் துணைமேயர் தேசியக்கொடியை ஏற்றினார்!

சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சேலம் மாநகராட்சி வரலாற்றில் முதன்முறையாக பெண் துணைமேயர் தேசியக்கொடியை ஏற்றினார்!

சேலம் மாநகராட்சி வரலாற்றில் பெண் துணை மேயர் ஒருவர் தேசியக்கொடியை ஏற்றி வைப்பது இதுவே முதல் முறையாகும்.
தேசியக்கொடியினை ஏற்றி வைத்த துணை மேயர் மா.சாரதாதேவி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியதையும் ஏற்றுக் கொண்டார். மேலும் , அங்கு வைக்கப்பட்டு இருந்த அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

அதனை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 8 தூய்மைப் பணியாளர்களுக்கு துணை மேயர் மா.சாரதாதேவி பாராட்டு சான்றிதழையும், கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றம் பரிசுகளையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் ஜி.ரவி முன்னிலை வகித்தார். மண்டலக்குழு தலைவர்கள் எஸ்.டி.கலையமுதன், செ.உமாராணி, மா.அசோகன், நிலைக்குழு தலைவர்கள் ஏ.எஸ். சரவணன், ஜி.குமரவேல், ஜெ.ஜெயகுமார், எஸ்.ஆர்.
சாந்தமூர்த்தி, கோ.மஞ்சுளா, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரங்களால், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.25 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை பெற்றார். அப்போது சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உடனிருந்தார்.
 
- செய்தியாளர் கா.தங்கதுரை, சேலம்.
நிழல்.இன் / 8939476777