திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐ5 சிறப்பு பல் மருத்துவ மையம்!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரிக்கு எதிரே, ஜி5 சிறப்பு பல் மருத்துவமனையை காவல்துணையர் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐ5 சிறப்பு பல் மருத்துவ மையம்!

திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டை வடக்கு பைபாஸில் பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி எதிரே அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐ5 டெண்டல் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு ஐ5 பல் மருத்துவ மையத்தின் பங்குதாரர்கள் டாக்டர் கே.மீனாட்சிசுந்தரம், டாக்டர் பி.குமார், டாக்டர் பி.கமலா ஷங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன், ஐ5 டெண்டல் கிளினிக்கை திறந்து வைத்தார். திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் ஆர்.ராமகிருஷ்ணன், சிகிச்சை மைய அறையை திறந்து வைத்தார்.

ஐ5 பல் மருத்துவம் மையத்தில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சி.பி.சி.டி ஸ்கேன் வசதி, "இன்ட்ரோ ஓரல் ஸ்கேனர்" என அழைக்கப்படும் அதிநவீன "பல் அளவு எடுக்கும் கருவி"  மூலம் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் தரமான வேர் சிகிச்சை, இம்ப்ளாண்ட் என அழைக்கப்படும் பல் கட்டுதல் போன்ற மருத்துவமும் செய்யப்படுகிறது.

திறப்பு விழாவில் டாக்டர்கள் முத்தையா, இருதய சிகிச்சை நிபுணர் அருணாசலம், பாஸ்கர், தெய்வகுமாரி, கனகசபாபதி, மனோஷா, விஜயபாரதி, ரீனா, இந்திய பல் மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டப் பொருளாளர் டாக்டர் செல்வின் ராஜ், காவல்துறை ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ், திமுக சமூக ஊடகவியல் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் செ.பா.தவசிக்கனி, திருநெல்வேலி

நிழல்.இன் / 8939476777