பழவேற்காடு வைரவன் குப்பம் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவராக ஞானமூர்த்தி ஏகமனதாக தேர்வு!
மீனவ கூட்டுறவு சங்கத் தலைவராக ஞானமூர்த்தி ஏகமனதாக தேர்வு. மீனவப் பெண்கள் கூட்டுறவு சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தி தேர்வு.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பத்தில் மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக ஞானமூர்த்தி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை முன்னிட்டு அவரை அறிமுகம் செய்து கொள்ளும் வகையில் பொன்னேரி மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.
அதேபோன்று மீனவப் பெண்கள் கூட்டுறவு சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தி, மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள், பெரியோர்கள், இளைஞர்கள் உடன் இருந்தனர்.
நிழல்.இன் / 8939476777