தனியார் பள்ளிகளை பாதுகாப்பதற்கு அரசு வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் : அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகள் நலச்சங்கம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கட்டண நிர்ணய குழுவானது குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தனியார் பள்ளிகளை பாதுகாப்பதற்கு அரசு வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும் : அனைத்து  தனியார் பள்ளிகள் நலச்சங்கம் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

அனைத்து தனியார் பள்ளிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் அவின்கோ இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர்  அனந்தகுமார், தகவல் மற்றும் ஊடகப் பிரிவின் தலைவர்  பெரியசாமி கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நைமுதீன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் த.சதீஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* 2018 வரை கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு டிடிசிபி இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

* கட்டண நிர்ணய குழுவானது குறைந்த கட்டணத்தை நிர்ணயிப்பதை அரசு கைவிட வேண்டும்.

* தனியார் பள்ளிகளை பாதுகாப்பதற்கு அரசு வலுவான சட்டத்தை இயற்ற வேண்டும்.

* தனியார் பள்ளிகள் இயக்குநகரகம் அமைக்கப்பட்டதை நமது சங்கம் வரவேற்கிறது.

* அங்கீகாரம் புதுப்பிக்கப்படாமல் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த ஆண்டு உடனடியாக புதுப்பிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமையாசிரியை ஜெசிமா பேகம் நன்றி கூறினார்.

- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777