விருதுநகரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை (அக்டோபர் 28) விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 28ம் தேதி ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து நேரிடையாக மனுக்கள் கொடுத்து தீர்வு காணலாம்" என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777