கனல் கண்ணன் கைதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கைது.

ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை உடைப்பேன் சர்ச்சையை கிளம்ப்பும் வகையில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்பாட்டம் நடத்தினர்.

கனல் கண்ணன் கைதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் போராட்டம் நடத்திய இந்து முன்னணி அமைப்பினர் கைது.

சில நாட்களுக்கு முன்பு இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் முடிவு விழாவில் பேசிய திரைப்பட சண்டை பயிற்சியாளரும் நடிகருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியா சிலையை உடைக்க வேண்டுமென சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

அவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படது. கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை, நேற்று புதுச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கனல் கண்ணனின் கைதை கண்டித்து, ஈரோடு மாவட்டத்தில் இந்து முன்னனி அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு பாஜக  தெற்கு   மாவட்ட ஊடக பிரிவின் தலைவர் அண்ணாதுரை, ஈரோடு  பாஜக ஊடகப்பிரிவு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாநில துணைதலைவர் A.N.T.செந்தில் மற்றும் இந்து முன்ணனி மாநில துணைதலைவர் சண்முகசுந்தரம், R. பிரபு, ஈரோடு மாவட்ட பெரிய சேமூர்  பாஜக  மண்டல செயலாளர் மற்றும்  இந்து முன்னனி நிர்வாகிகள்   என இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.