முதல்வரை நான் சந்தித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.. எடப்பாடி அரசியலில் விட்டு விலக தயாரா? : ஓபிஎஸ் சவால்

மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், "நான் முதல்வரை சந்தித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.. எடப்பாடி அரசியலில் விட்டு விலக தயாரா?" என கேள்வி எழுப்பினார்.

முதல்வரை நான் சந்தித்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.. எடப்பாடி அரசியலில் விட்டு விலக தயாரா? : ஓபிஎஸ் சவால்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முன்னாள் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஆறுமுகம் சாமி ஆணையும் வழங்கிய தீர்ப்பு நீதி குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளனர் அதனால் கருத்து கூற முடியாது. அதிமுக தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். 

அம்மாவும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டுகாலம் கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று பல தியாகங்களை இந்த இயக்கத்திற்காக செய்துள்ளார். இந்த 50ஆம் ஆண்டு திருநாளை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் விரும்பத்தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார்கள் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். இவ்வளவு பெரிய செயலை பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது பழி போடுவது என்பது ஏற்புடையது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியது யார் என்றும் நம்பிக்கை துரோகம் செய்தது யார் என்பதை நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும் ஒரே நேரத்தில் அவர்களுடன் இருப்பேன்." என ஒ.பன்னீர்செல்வம் கூறினார்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777