இளையான்குடி தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

ஒற்றைக்காலில் நின்றபடி ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர் தாய்த்தமிழ் பண்பாட்டுப் பள்ளி மாணவர்கள்.

இளையான்குடி தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

சிவகங்கையில் நடைபெற்ற குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு மற்றும் மூவேந்தர் சிலம்பம் & தமிழரின் பாரம்பரிய கலை வளர்ச்சி கழகம் சார்பாக இணைந்து  
ஒற்றைக்காலில் 1 மணி நேரம் சிலம்பம் சுற்றலுக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில், சிவகங்கை மாவட்டம் புதூர் - இளையான்குடியில் செயல்பட்டு வரும் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி மாணவர்கள் அப்துர் ராபியு, சித்திக்குமார், ரமாதேவி, தொல்காப்பியா (எ) ஹர்சிதா மற்றும் தியா ஆகியோர் பங்கு பெற்று உலக சாதனை புரிந்தனர்.

நிகழ்வினை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதனன் ரெட்டி  கொடியசைத்து துவக்கி வைத்தார். பல்வேறு சிறப்பு அழைப்பாளர்களோடு நடைபெற்ற உலக சாதனை நிகழ்வை சிவகங்கை மாவட்ட மல்லர் கம்பம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நாக.கலைச்செல்வம் தனது நண்பர்களோடு ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.

நிகழ்வில், தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப் பள்ளியின் நிறுவனர் கவிஞர் சோதுகுடி சண்முகன், தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப் பள்ளியின் ஆசான்கள் காளீஸ்வரன் மற்றும் கோகுல சபரி சிவம் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

உலக சாதனை புரிந்த மாணவர்களை தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப் பள்ளியின் தலைவர் சரவணன், செயலர் மாணிக்கம் மற்றும் நிர்வாக தலைமை ஆலோசகரும் இராமநாதபுர சிலம்பாட்ட கழகத்தின் மாவட்ட செயலாளருமான தில்லைக்குமரன்,  பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டினர்.

- செய்தியாளர் மா.மு.ஜெயக்குமார், சிறப்பு செய்தியாளர்
நிழல்.இன் / 8939476777