அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு!
திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு அளித்த துபாய் வாழ் முகநூல் ரவி சொக்கலிங்கம், ஆசிரியர் பழனிக்குமாருக்கு பாராட்டு மழை குவிகிறது.

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன்காக்க கல்வியறிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பள்ளியினர் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட சேவை மனப்பான்மையுள்ளம் படைத்த நல் இதயங்கள் இதனை பயன்படுத்தும் விதமாக பென்சில், அகராதி, கலர் பாக்ஸ் போன்ற பொருள்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் பயில துவங்கிய 6 ஆண்டுகளில் முதன் முதலாக வெளிநாட்டில் வாழ் தமிழர் மூலமாக பரிசு பெற்ற நிகழ்வு மாணவர்களுக்கு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் துபாய் வாழ் ரவி சொக்கலிங்கம், 75 -வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் முதன் முதலாக மேடை ஏறி சுதந்திர போராட்ட தியாகிகள் போல மாறுவேடம் அணிந்து தன் திறமைகளை வெளிப்படுத்திய திறனை மேம்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாணவருக்கும் மணியார்டர் மூலம் ரவி சொக்கலிங்கம் ஊக்கப் பரிசு வழங்கி சிறப்பித்துள்ளார்.
பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்ற தருணம் ஊக்கப் பரிசு வந்தடைந்தது கூடுதல் சிறப்பாக மாணாக்கர்களுக்கு அமைந்தது. பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவி எம்.விஜயா, உறுப்பினர்கள் பூமிகா, கபிலன், செந்தமிழ்செல்வன், மகளிர் உதவிக்குழு தீபா, தன்னார்வலர் கவியரசி கரங்களால் மாணாக்கர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினர். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணாக்கர்கள் கலந்து கொண்டனர்.
ஊக்கப் பரிசினை வழங்கிய துபாய் வாழ் ரவி சொக்கலிங்கம், மணியார்டர் மூலமாக ஊக்கப் பரிசு பள்ளி வருவதற்கு உதவிய ஆசிரியர் பழனிக்குமார் ஆகியோரை பள்ளியினர், மாணாக்கர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் மகிழ்ந்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
- மா.மு.ஜெயக்குமார், சிறப்பு செய்தியாளர்
நிழல்.இன் / 8939476777