வழக்கறிஞர் வீட்டில் லேப்டாப், வாட்ச் உள்ளிட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு : போலீசார் விசாரணை!

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் இரண்டு லேப்டாப் மற்றும் வாட்சுகள் உள்பட ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளது. திருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வழக்கறிஞர் வீட்டில் லேப்டாப், வாட்ச் உள்ளிட்ட 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு : போலீசார் விசாரணை!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே திருநகர் 5வது பஸ் நிறுத்தம் அருகே மந்திதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் தனது மனைவி லட்சுமி (வயது 53), மகன் விஷ்ணுகாந்தன் (வயது 26) உடன் வசித்து வருகிறார். விஷ்ணுகாந்தன் வழக்கறிஞராக பணிபுரிவதால் நேற்று இரவு லேப்டாப்பில் வழக்குகள் குறித்து விவரங்களை பதிவு செய்து கொண்டிருந்தார். இரவு விஷ்ணுகாந்தனும் அவரது அம்மா தாயார் லட்சுமி ஆகிய இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

வெளியூர் சென்றிருந்த செந்தில்வேல், அதிகாலையில் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே மனைவி மகனை எழுப்பிக் கேட்டுள்ளார். அப்போது, விஷ்ணுகாந்தின் இரண்டு லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் இரண்டு ஆகியவை காணவில்லை. இதன் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். இது குறித்து விஷ்ணுகாந்தன் கொடுத்த புகாரின் பேரில் திருநகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர், மணிராஜ் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777