செய்தியாளர்கள் சீப்பையே ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது" - முதலமைச்சர் கலந்துகொண்ட அரசு விழாவில் போலீசார் எடுத்த விநோத பாதுகாப்பு நடவடிக்கை!
திருநெல்வேலியில் முதலமைச்சர் கலந்துகொண்ட அரசு விழாவில், செய்தியாளர்களின் சீப்பை கூட பறிமுதல் செய்து உள்ளே அனுமதித்த காவல்துறையினர். சீப்பை ஆயுதமாக பயம்படுத்த வாய்ப்பிருப்பதாக போலீசார் விளக்கம்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தமிழக அரசின் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் பங்கேற்ற செய்தியாளர்களிடம் பாதுகாப்பு நலன் கருதி காவல்துறையினர் அவர்களது பையில் வைத்திருந்த சீப்பைக் கூட பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்கள், காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியபோது, "சீப்பை ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது! எனவே தான் சீப்பை பறிமுதல் செய்கிறோம்" என்று விளக்கம் அளித்தனர்.
இதனால் தமிழக முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் நிருபர்கள் தலையைச் சீவி சிங்காரமாக இருக்க முடியவில்லையே? என்ற வருத்தத்தில் அமர்ந்து இருந்தனர்.
- செய்தியாளர் செ.பா.தவசிக்கனி, திருநெல்வேலி.
நிழல்.இன் / 8939476777