திருவள்ளூர் மாவட்டத்திலேயே பனை விதைப்பு பணியை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் பாராட்டு...

திருவள்ளூர் மாவட்டத்திலேயே பனை விதைப்பு பணியை சிறப்பாக செயல்படுத்திய சோழவரம் ஒன்றியம் நெற்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு அவர்களை, மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் பாராட்டினார்.

திருவள்ளூர் மாவட்டத்திலேயே பனை விதைப்பு பணியை சிறப்பாக செயல்படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் பாராட்டு...

தமிழகத்திலேயே முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் அவர்களுடைய  தொலைநோக்கு பார்வையுடன், பனைவிதை வங்கி" யை உருவாக்கி அதன் மூலம் பனை மரங்கள் அதிகம் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் பனை விதைகளை சேகரித்து அவைகளை நடவு செய்ய விருப்பம் தெரிவிக்கும் ஊராட்சிகளுக்கு வழங்கும் வகையில் அந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சோழவரம் ஒன்றியம் நெற்குன்றம் ஊராட்சியில் அந்த ஊராட்சி மன்ற தலைவர் பாபு அவர்கள் பனைவிதைப்பு பணியை மிக சிறப்பாக செய்ய வேண்டி முயற்சிகள் மேற்கொண்டார்.  அதன்படி,  அதே ஊராட்சியில்  பனை விதைகளை ஒன்று விடாமல் சேகரித்து வைத்ததுடன், மேலும், சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்க கூடிய பனை விதைகளையும் விலைக்கு வாங்கி சேகரித்து கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 50,000 விதைகளை இரண்டு கிலோமீட்டர் மேலாக கொசஸ் தலை ஆற்றின் கரையல்களிலும் ஏரிக்கரைகள் மற்றும் மேய்க்கால் நிலங்கள் தரிசு நிலங்கள் என அனைத்து இடங்களிலும்
நடவு செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

அதனை தொடர்ந்து, நெற்குன்றம் ஊராட்சியில்,  ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் முன்னிலைகளும், ஊராட்சி மன்ற தலைவர் பாபு அவர்கள் தலைமையிலும்,  கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரங்களில், பனை விதைப்பு பணியை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும்,  அந்த ஊராட்சி முழுவதும் பனை விதை பணிகளை மேற்கொள்ளும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களிடம் பனை விதைப்பு பணிகள்  குறித்தும் வருங்காலங்களில் பனை மரங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்க கூடிய பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், திருவள்ளுர் மாவட்டத்திலேயே, ஒரே ஆண்டில் 50,000 பனை விதைகளை சேகரித்து நடவு செய்த நெற்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு அவர்களை பாராட்டினார்.

மேலும், இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பாபு அவர்கள் கூறுகையில், “நமது மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனையின் படி, செயல்பட கூடிய இந்த  பனைவிதை வங்கியின் மூலம் பனை விதைகளை சேகரித்து,  ஊராட்சி முழுவதும் பனை விதைகளை  விதைப்பதனால், எதிர்காலத்தில் இந்த ஊராட்சியில் உள்ள மக்கள்கள் அதிக அளவில்  பயனடைவார்கள் என்பதை உணர்ந்து, நான் இந்த பனை விதைப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டேன்.  

என்னுடைய முயற்சிக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் சுதர்சனம் அவர்களும், ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் அவர்களும், அதிக அளவில் எனக்கு உதவிகள் செய்தனர். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாவட்ட  ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கள் ஊராட்சியில் பயன்பாட்டில் இல்லாத  மெய்க்கால் நிலங்கள் 15 ஏக்கர் முழுவதும் பனை விதைகள் விதைப்பதற்க்கும் மற்றும் பலன் தரக்கூடிய மர வகைகளை நடவு செய்வதற்க்கும் அதிக அளவில்  உதவிகளை செய்து வருகிறார். மேலும், அந்த பதினைந்து ஏக்கருக்கு நடக்கூடிய மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், வேலி அமைத்து கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகள் கழித்து எங்கள் ஊராட்சியில் உள்ள மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.” என கூறினார்.

- செய்தியாளர் ரெட்டில்ஸ் நண்பன் அபுபக்கர்
நிழல்.இன் - 8939476777