மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம்!

மதுரையில் மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுடன் மத்தாப்பூ கொளுத்தி தீபாவளியை சிறப்பாக கொண்டாடியது கிழக்கு ரோட்டரி சங்கம்.

மனவளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம்!

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பெத்சான் சிறப்பு பள்ளியில் மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமையில் சிறப்பு தீபாவளி  கொண்டாட்டம் நடைபெற்றது.

50க்கும் மேற்பட்ட மன வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. அதோடு மத்தாப்பூ கொளுத்தி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதோடு கடந்த ஆண்டு மனவளர்ச்சி குறைபாடு கொண்டவர்களுக்கான சிறப்பு ஒலிம்பியாட் போட்டியில் பதக்கங்களை வென்ற ஐந்து வீரர்களுக்கு கோப்பைகளும் வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் நாகரத்தினம், செயலாளர் நெல்லை பாலு, பள்ளி இயக்குனர் ஜெயபால், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மெய்யப்பன் ராதிகா  மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777