மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது - சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்...

மதுரையில் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் போலீசாரின் வாகன சோதனையின் போது சிக்கினார். ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர் கைது - சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்...

மதுரை மாவட்டத்தில்  சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை  செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம்  பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  S.N.கல்லூரி  அருகே, போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது  சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபரை   போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக பெருங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியை கைது செய்தனர். மேற்படி நபரிடம் இருந்து  சுமார் ஒரு கிலோ  250 கிராம் கஞ்சா  போலீசார் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்கள்.

- செய்தியாளர் வி.காளமேகம் மதுரை. 
நிழல்.இன் - 8939476777