தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது!

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது!

தாய் மழலையர் மற்றும் தொடக்கப்  பள்ளியில் ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது!

தாய் மழலையர் பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மழலையருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் குழந்தைகளுக்கு சந்தோசமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக பல விழாக்கள்  நடைபெறுகின்றது.

அவ்விதமாக இந்த வாரம் ஊட்டச்சத்து நாள் நடைபெற்றது. இதில் நல்ல சத்தான உணவு பழக்க வழக்கங்கள், உணவு உட்கொள்ளும் முறைகள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் பயன்பாடு, மற்றும் சில விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

 இந்நிகழ்ச்சியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பயிறு வகைகள், முட்டை போன்றவைகளை ஒவ்வொரு குழந்தையும் கொண்டு வந்து அதன் சிறப்பு தன்மைகளை எடுத்துக் கூறினார்கள். இவ்விழா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777