டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் 10 ரூபாய் சாப்பாடு வழங்கப்பட்டது!

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் 91வது பிறந்தநாளில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் வாரந்தோறும் 10 ரூபாய் சாப்பாடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம் சார்பில் 10 ரூபாய் சாப்பாடு வழங்கப்பட்டது!

பொதுமக்களுக்கு இலவசமாக உணவை வழங்காமல், அனைவரும் சுயமரியாதையோடு உணவருந்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் வாரந்தோறும் 10 ரூபாய்க்கு தரமான அரிசி, சாம்பார், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்டவைகளுடன் உணவு வழங்கப்படுகிறது. சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அன்சர் பாத்திமா தலைமையில் 10 ரூபாய் சாப்பாடு செங்குன்றம் பேருந்து நிலையம் எதிரே வழங்கப்பட்டது.

வட்டாரத் தலைவரும் சென்னை சோசியல் லயன்ஸ் சங்க உடனடி தலைவருமான நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் வரவேற்புரையாற்றினார். செங்குன்றம் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஜி.ராஜேந்திரன், செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சி தலைவர் கு.தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர். விப்ரநாராயணன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள்  எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், என்.சகாதேவன்,  வள்ளி மயில் பிராப்பர்ட்டீஸ் உரிமையாளர் ரவி ஆகியோர் 10 ரூபாய் சாப்பாடு வழங்குவதை துவக்கி வைத்தனர்.

இதில் வட்டாரத் தலைவர் பாடியநல்லூர் லயன்ஸ் சங்க உடனடி தலைவருமான கா.ஷண்முக சுந்தரம், சென்னை சோசியல் லயன்ஸ் உறுப்பினர் சேர்க்கை இயக்குநர் கோகுல் எஸ்.வைத்தீஸ்வரன், மார்க்கெட்டிங் கம்யூனிகேட்டர் எஸ்.ரமேஷ், சத்தியநாராயணன், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் காஜா இப்ராஹீம், சமூக நல ஆர்வலர்கள் கூட்டமைப்பு சட்ட ஆலோசகர் வெங்கட், நிர்வாக குழு உறுப்பினர் பாபு, பாசில், கிளாட்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சென்னை சோசியல் லயன்ஸ் சங்கப் பொருளாளர் பயாஸ் உசேன் நன்றி தெரிவித்தார்.

- செய்தியாளர் பூர்ணவிஷ்வா
நிழல்.இன் / 8939476777