வடசென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்திலும், இந்தியாவில் மலையாளிகள் வாழும் பகுதிகளிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால்... வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்; அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வட சென்னையிலுள்ள வட சென்னை மலையாளிகள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது அத்திப்பூக்களால் இடப்பட்ட கோலத்தில் மாவலி வேடம் அணிந்த சிறுவன் நிற்க கேரள பெண்கள் சுற்றி நின்று குளவையிட்டு திரிவாதிரா நடனமாடினர். இதில் வடசென்னையில் வசிக்ககூடிய சுமார் 600க்கும் மேற்பட்ட மலையாளிகள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சென்னையில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பங்களுக்கு, ஓணம் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வட சென்னை மலையாளிகள் சங்க நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டது.
இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் பால்சன் கூறுகையில், "10 நாட்களாக கொண்டாடப்படும் இந்த திருஓணம் திருவிழாவில் 8வது நாளான இன்று தாங்கள் செண்டை மேளம் கொட்டி கொண்டாடியதாகவும், இந்த பண்டிகைக்கு தேவையான பொருட்களை 600குடும்பங்களுக்கு கேரளாவில் இருந்து வரவழைத்து கொடுத்ததாகவும்" கூறினார்.
நிழல்.இன் - 8939476777