பரமக்குடி திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து : போலீசார் விசாரணை

பரமக்குடி திமுக நகர்மன்ற உறுப்பினர் பாக்யராஜ் என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 10 பேர் கொண்ட மர்ம கும்பல். போலீசார் விசாரணை!

பரமக்குடி திமுக நகர்மன்ற உறுப்பினருக்கு கத்திக்குத்து : போலீசார் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடியில் ஐந்தாவது வார்டு நகர்மன்ற உறுப்பினராக உள்ளவர் பாக்யராஜ். பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவர் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுவிட்டு, பரமக்குடி பாரதிநகர் பகுதியில் உள்ள வடக்கு நகர் செயலாளர் ஜீவ ரத்தினத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகர மன்ற உறுப்பினர் பாக்யராஜை சரமாரியாக தாக்கியதோடு,  அவரது வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு சென்றனர். இரத்த வெள்ளத்தில் காயம் அடைந்த பாக்யராஜ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பரமக்குடி போலீசார்கள் விசாரணை செய்து வருகின்றனர். சமீபகாலமாக மாவட்டத்தில் திமுகவினர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்குள்ளேயே அடிக்கடி அதிகாரப்பகிர்வு காரணமாக மோதல் ஏற்பட்டு வந்தது . இந்நிலையில்  திமுக நகர்மன்ற உறுப்பினரை கத்தியால் குத்திய சம்பவம் பரமக்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும்... பதற்றத்தையும்... ஏற்படுத்தி உள்ளது.

- செய்தியாளர் மாமுஜெயக்குமார், இராமநாதபுரம்
நிழல்.இன் / 8939476777