மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு

மாவட்ட அளவிலான போட்டிகள் பரமக்குடி பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றனர்.

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான எறிபந்து போட்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தேர்வு பெற்றது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகள் மாவட்டப் போட்டிகளில் பங்கு பெற்றனர். மாவட்டப் போட்டிகள் பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட  விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் 14 வயது, 19 வயதுக்குட்ட எறிபந்துப் போட்டியில் பல்வேறு அணிகளைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கமும் சான்றிதழும் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றனர். இம்மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான எறிபந்துப் போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர் ராஜா, நிரோஷா பானு ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் சாதிக் அலி, பொருளாளர் லியாகத் அலி கான், பள்ளியின் தாளாளர் ஷாஜஹான், பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் அஜ்மல்கான் ஆசிரியர் - ஆசிரியைகள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பாராட்டினர்.

- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777