பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் ரோகித் ஓட்டப் பந்தயத்தில் சாதனை : மாநில அளவிலான போட்டிக்கு தகுதி!
இராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஹரிஸ் வர்மா மெட்ரிக் பள்ளி மாணவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் வளாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 1500 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி மற்றும் 800 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி என இரண்டிலும் பரமக்குடி ஹரிஸ் வர்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ப்ளஸ்-2 மாணவர் ரோகித் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர், அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். மாணவரின் சாதனையை கண்டு பள்ளியின் பொருளாளர் கல்பனாதேவி, முதல்வர் கவிஞர் சோதுகுடி சண்முகன், நிர்வாக மேலாளர் சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் கல்யாண சுந்தரம் உள்பட ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
- செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777