திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி வீர இந்து பேரமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியிடம் மனு.

இந்துக்களை இழிவாக பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீர இந்து பேரமைப்பு தமிழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

திமுக எம்.பி ஆ.ராசாவை கைது செய்யக்கோரி வீர இந்து பேரமைப்பு சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியிடம் மனு.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள் விடுதலை நாளேடு ஆண்டு விழாவில், இந்து தர்மத்தை இழித்தும்  பழித்தும் பேசிய, இந்து என்றாலே விபச்சாரியின் மகன் தீண்ட தகாதவன் என்று இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்லி இந்து மக்களின் மனதை மத உணர்வையும் புண்படுத்திய இருக்கின்றார்.

அனைத்து மத தரப்பு மக்களும் பொதுவானவராக பாரபட்சம் பார்க்காமல் உழைப்பேன் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பால் சத்யபிரமாணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினரானவர் இவ்வகையில் பேசுவது சட்டத்திற்கு இந்திய இறையாண்மைக்கும் எதிரானது. 

ஆ.ராசா அவர்கள் தொடர்ச்சியாக இந்து தர்மத்தின் மீது விஷம் தடவிய வார்த்தைகளைக் கொண்டு அடிக்கடி வசைப்பாடுவதையும் வழக்கமாக  கொண்டிருக்கிறார். இவரால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகின்றது. பெரும்பான்மை மக்களின் மத உணர்வை புண்படுத்திய ஆ.ராசா மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பதற்கு சபாநாயகர் அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும்” என அவர்கள் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் - 8939476777