கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் மாணவர்கள் கல்விச் சுற்றுலா!

கொடைக்கானல், கூடங்குளம் அணுமின்நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் இயற்பியல் துறை மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு சென்று பயனடைந்தனர்.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் மாணவர்கள் கல்விச் சுற்றுலா!

தமிழகத்தில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான கோவை நவ இந்தியா பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும் அடங்கும்.

இக்கல்லூரியில் கல்வியறிவோடு, பேச்சு, நடனம், விளையாட்டு, தனித்திறன் போட்டி என பல்வேறு வகைகளில் மாணவர்களை உற்சாகப்படுத்தியும், அவ்வப்போது கோவைக்குள் பற்பல இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்வி போதிப்பதில் சிறந்து விளங்குவதால், தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இக்கல்லூரியை நாடி வந்து கல்வி பயில வைப்பது நடைமுறை பழக்கமாக உள்ளது.

மேலும், இக்கல்லூரியின் முதல்வர் - செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமையில் அந்தந்த துறைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேராசிரிய பெருமக்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்கள் நடத்துவது எங்களுக்கு படிக்க தூண்டுகிறது என மாணவர்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இந்நிலையில், கல்லூரியில் இயற்பியல் துறையைச் சேர்ந்த மாணவர்களை  கல்விச் சுற்றுலாவிற்கென கன்னியாகுமரி கூடங்குளம் அணுமின் நிலையம், கொடைக்கானல் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தை சுற்றி காண்பித்து மாணவர்களுக்கு கல்வி சம்மந்தமாக துறை துணைத்தலைவர் முனைவர் மனோகரன், பேராசிரியர் ரஸாக், பேராசிரியை சஹானா பாத்திமா ஆகியோர் விளக்கமளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குள் சென்று தங்களது துறை சம்மந்தமாக கல்வி பயின்றது மாணவர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது.

முன்னதாக, கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்களை கல்லூரி முதல்வர் - செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், துறைத் தலைவர் முனைவர் பூங்குழலி, துறை பேராசிரியை திவ்யா உள்பட பேராசிரிய பெருமக்கள் அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

கல்விச் சுற்றுலா சென்று வருவது தங்களது குழந்தைகளுக்கு பாடம் பயில்வதில் ஓர் மைக்கல். மேலும், கல்லூரி நிர்வாகத்தினர் இப்படியொரு முயற்சி எடுத்து செயல்படுத்துவது மகிழ்ச்சிக்குரியது. பாராட்டுக்குரியது என பெற்றோர்கள் கூறினர்.

- சிறப்புச் செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777