தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் - சான்வி திருமண வரவேற்பு நிகழ்ச்சி - அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், TUJ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்!

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் - சான்வி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் - சான்வி திருமண வரவேற்பு நிகழ்ச்சி - அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், TUJ நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்!

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ) நிறுவன தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களின் பேரனும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் - விஜி சுபாஷ் ஆகியோரின் மகன், ரோஷன் - சான்வி திருமணம் கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி, கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கு மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்வார்பேடையில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

அதில், "மணிப்பூர் இரும்பு மங்கை " இரோம் ஷர்மிளா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஐயா கு.வெங்கட்ராமன், கர்நாடக மாநில தலைவர் தோழர் P.பாஸ்கர் ரெட்டி, புதுச்சேரி மாநில தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா ஆகியோருடன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.கே ராஜராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், கவிஞர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவடி சே. வரலட்சுமி, தயாரிப்பாளர் போரூர் அய்யப்பன்,  தேசிய குழு உறுப்பினர்கள்  கோவை எஸ்.மோகன்ராஜ், மகாவீர் சந்த் ஜெயின், மற்றும் நிர்வாகிகள் போரூர் ஜனா, குடியாத்தம் ஆனந்தராஜ், தலித் குமார், சிவகுமார் ராஜ்பிரபு, சித்ரஞ்சன், சன்முகம், கோவை "ஸ்மார்ட்" சுரேஷ்," ஸ்மார்ட்" ரம்யா, உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அதில், திருமணத்தின் போது, மாநில பொதுச்செயலாளர் கு.வெங்கட்ரமென் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுந்தர நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் சூடிய
மாலை, கிளியை அன்பளிப்பாக  வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

முன்னதாக, பத்திரிக்கையாளர்களின்  போராளி டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களுடைய மனைவி சசிகலாதேவி அவர்களும் மற்றும் அவருடைய இளைய மகன் கமல்ஹாசன்,  மணமகனின்  சகோதரியும் தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகையுமான ஆர்த்தி சுபாஷ் ஆகியோர் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரையும்  வரவேற்றனர்.

அதனை  தொடர்ந்து, பின்னர் செப்டம்பர் மாதம் 18 ம் தேதி, சென்னை வேப்பேரியில் உள்ள BKN வளாகத்தில் மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தபட்டது. அதில், சிறப்பு அழைப்பாளர்களாக சுதந்திரப் போராட்ட தியாகி அய்யா நல்லகண்ணு அவர்களும், தமிழின போராளி ஐயா பழ. நெடுமாறன், அவர்களும் ஐயா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷெண்டே அவர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும்,  த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன்,
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களும்,  இயக்குனர் ஆர்.உதயகுமார், திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ், நகைச்சுவை நடிகர் செந்தில், திரைப்படத் தயாரிப்பாளர் கே.எம்.ராஜன் உட்பட பல  திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

தமிழக அளவில் இருக்க கூடிய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்   மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 

அதில் குறிப்பாக, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில நிர்வாகி ஆவடி தினமணி செய்தியாளர் மணிமாறன், மற்றும் செங்குன்றம் ஜானகிராஜன் திருவள்ளூர் கிழக்கு மாவட்டதை சேர்ந்த பொன்னேரி, ஊத்துக்கோட்டை, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளை சேர்ந்த டி.யூ.ஜெ நிர்வாகிகள் ராஜ்குமார், அருள், மெய்யழகன், சுந்தர், ஆமூர் தனசேகரன், ஆரணி சுப்பிரமணி, ஜெயபிரகாஷ்  கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மாநில நிர்வாகி கழுகு ராஜேந்திரன், போரூர் ஜான் ஆகியோர் உட்பட வடசென்னை மற்றும் தென்சென்னை நிர்வாகிகள், திருவொற்றியூர் முருகன், பிரேம்குமார், லட்சுமணன், ஆகியோர் உட்பட பல பத்திரிகை யாளர்கள் கலந்துகொண்டு  மணமக்களை வாழ்த்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் முக்கிய நிர்வாகிகள் கொழுமம் தாமோதரன், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் திரளாக வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட தலைவர் தோழர் V.D. சிவமூர்த்தி, PRO தோழர் பாலாஜி ஆகியோருடன் சமூக பயணம் மாத இதழ் மற்றும் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பின் சார்பில் மகா.தினகரன், தி.பண்பரசன், ச.ராஜ்குமார், கோ. சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டோம், இந்நிகழ்வில் ஐயா.கி.மு. அருந்ததி திராவிடமணி அவர்கள் நம்மோடு கலந்து கொண்டனர்.

நிழல்.இன் / 8939476777