சென்சார் கோளாறினால் SSLV D1 மிஷன் தோல்வி : இஸ்ரோ அதிகாரிப்பூர்வ அறிவிப்பு...

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே SSLV ராக்கெட்டின் சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சென்சார் கோளாறினால் SSLV D1 மிஷன் தோல்வி : இஸ்ரோ அதிகாரிப்பூர்வ அறிவிப்பு...

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதிஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

அதிகாலை 3.18 மணிக்கு செயற்கைகோள் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது. சுமார் 6 மணி நேரத்திற்குப் பிறகு பூமியில் இருந்து கிளம்பிய எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் கிளம்பியது.

அரசுப் பள்ளி மாணவிகள் சேர்ந்து உருவாக்கிய 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதேபோன்று 8 கிலோ எடை கொண்ட ஆசாதிசாட் செயற்கைக்கோளில் சோலார் பேனல்களை படம்பிடிக்கும் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

செயற்கைகோள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துடன் செயற்கைகோளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.

பின்னர், செயற்கைக்கோளின் சென்சார் செயலிழப்பே இந்த பிரச்னைக்கு காரணம் என அறியப்பட்டுள்ளது. அதனால், SSLV D1 மிஷன் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.