25 ஆண்டுகளாக கடை நடத்தி வந்த தெருவியாபாரிகளை அப்புறப்படுத்திய சேலம் மாநகராட்சி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தெருவியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
25 வருடங்களாக சேலம் கோட்டை ஹபீப் தெருவில் கடை நடத்தி வந்த தெருவியாபாரிகளை சாலை அமைக்கும் பணியை காரணம் காட்டி அப்புற படுத்திய மாநகராட்சி நிர்வாகம். மீண்டும் கடை வைக்க அனுமதி மறுப்பதோடு, மாற்றும் இடமும் கொடுக்கவில்லை என வியாபாரிகள் போராட்டம்.

சேலம் மாவட்ட தெருவியாபார தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தெருவியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெருவியாபார தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார்.
ரமேஷ்குமார், குமார், லட்சுமணன், பழனியப்பன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட செயலாளர் வி.ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆர்.எஸ்.பி. மாவட்ட அமைப்பாளர் ஆ.ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் வரதராஜன், ரமணி, சுந்தரம், வெங்கடேசன், மாலன், ஆறுமுகம், செந்தில் (எ) பாலமுருகன், பாலு, ஹரிஹரன், பிரகாஷ், பன்னீர்செல்வம் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சேலம் மாநகரம் கோட்டை ஹபீப் தெருவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரெடிமேட் பனியன்கள், ஸ்வெட்டர் போன்றவைகளை வைத்து வியாபாரம் செய்து வந்த தெருவியாபாரிகளை அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பதாகக் கூறி அப்புறப்படுத்தினர். ஆனால் சாலை பணிகள் முடிந்த நிலையிலும் கடைகள் நடத்திக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தடுத்து வருகிறது.
உடனடியாக அப்பகுதியில் கடைகள் வைத்துக்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்தி வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும். தெருவியாபாரிகள் சட்டம் 2014ன்படி கடைகள் நடத்த மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- செய்தியாளர் கா.தங்கதுரை, சேலம்
நிழல்.இன் / 8939476777