திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
60 சதவிகித மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மானவர்களுக்கு ஜே.எஸ்.டபுள்யு உடான் ஸ்காலர்ஷிப்ஸ் பெறுவது எப்படி அதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்பிரிவுகளில் 60% தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நிகழ்ச்சி மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி தலைமையில் நடைபெற்றது.
ஜே.எஸ்.டபுள்யு உடான் ஸ்காலர்ஷிப்ஸ் எனும் இந்த திட்டத்தில் ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை, பி.இ., பி.டெக், மெடிக்கல் உள்ளிட்ட படிப்புகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்தும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புவதற்குமான துவக்க நிகழ்ச்சி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்தா வித்யாலயா ஸ்ரீராம், அனுப்பம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சார்லஸ் எனும் உமா மகேஸ்வரன், மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆசான்.ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் நந்தியம் கதிரவன், சமூக ஆர்வலர்கள் சசி, சௌரிராஜன், ராஜ் கண்ணன், ஜே எஸ் டபிள்யூ திட்ட ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிழல்.இன் / 8939476777