தேனியில் கண்ணகி கோயில் திருப்பணியை முடிக்க தமிழக முதல்வருக்கு நினைவூட்டலுக்காக சிறப்பு யாக பூஜை.
தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் விதமாக ஸ்ரீ மங்கல தேவி கண்ணகி மலைக்கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்துடன் பக்தர்கள் மலை மேல் செல்ல பாதை அமைத்தும், மாதம் தோறும் பௌர்ணிமி நாளில் கண்ணகி கோயிலில் வழிபட அனுமதி வேண்டியும் கண்ணகி தாய்க்கு தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பாக "தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சந்தை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூடலூர் பளியன்குடி ஸ்ரீ கற்புக்கரசி மங்கல கண்ணகி தேவி மலைக்கோவில் திருப்பணி, கும்பாபிஷேக திருப்பணிகள் மற்றும் சாலை வசதிகள் காலவிரயமின்றி செய்திட வேண்டி புதன்கிழமை அன்று தேனி, பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு சந்தை மாரியம்மன் திருக்கோவிலில் காலை 10 மணியளவில் யாக பூஜை ஆரம்பித்து, 12 மணி வரை நடைபெற்றது.
ஆலய பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் அதன், உட்பிரிவில் இயங்கும் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் சுடலைமணிஜியின் அழைப்பை ஏற்று பூஜை சிறப்பாக நடைபெற்றது
இது குறித்து,அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுடலைமணிஜியிடம் கேட்ட போது, "கூடலூர் பளியன்குடி, ஸ்ரீமங்கலதேவி கண்ணகி மலைக்கோவில் கூடலூர் நகராட்சியின் எல்லை முடிவில் பளியன்குடி வழியாக 1934-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் 12 அடி சாலை அமைப்பதற்கு அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து,1985-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கண்ணகி மலைக்கோவில் பக்தர்களின் வசதிக்கு 12 அடியில் 20 இலட்சம் செலவில் சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டி அத்திட்டமானது பாதியில் நின்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதை மீண்டும் இன்றைய முதலமைச்சர் கலைஞரின் வாரிசான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கையோடு நினைவுபடுத்தி பக்தர்கள் மலை மேல் சென்று பளியன்குடி கண்ணகி தேவியை வழிபட வேண்டி 12 அடி சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்து பட்டி தொட்டி வாழ் மக்கள் மற்றும் அருகாமையில் உள்ள மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட கண்ணகி தேவியின் அதி தீவிர பக்தர்கள் மலைக் கோவிலுக்கு மாதம்தோறும் பெளர்ணமி அன்றும், ஆண்டு தோறும் மூன்று நாட்கள் நடைபெறும் சித்ரா பெளர்ணமி திருவிழா எனும் சிறப்பு வாய்ந்த நாட்களில் மலைக் கோவிலுக்கு சென்று வழிபட அம்மனின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
மேலும், பளியன்குடி கண்ணகிதேவி மலைக்கோவிலை தமிழக அரசின் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும்.
மலைக்கோவிலுக்கு செல்ல 12 அடி சாலை வசதி, மாதம்தோறும் பெளர்ணமி நாளில் அம்மனை வழிபடவும், சித்ரா பெளர்ணமி திருவிழா நடத்திட பக்த கோடிகளுக்கு தடையில்லா அனுமதி, கண்ணகி கோவிலை தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்வது மற்றும் திருநெல்வேலியில் உள்ள அத்திரிமலை, வெள்ளயங்கிரி மலை, சதுரகிரிமலை, பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு மலைக்கோவில் இடங்கள் புலிகள் காப்பகமாக இருந்து வரக்கூடிய சூழலில் தற்போது மாதம் மற்றும் ஆண்டு தோறும் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்பட்டு திருவிழாக்கள் நடந்து வருவதைப் போல, பளியன்குடி கண்ணகிதேவி கோவிலுக்கும் தடையில்லா அனுமதி அளித்திட வேண்டுமென்பதன் மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக யாகபூஜை நடத்த முடிவு செய்யப்பட்டதாக" சுடலைமணிஜி நம்மிடத்தில் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்தினை ஈர்க்கும் விதமாக கண்ணகி தாயை குலதெய்வமாக வழிபடும் வம்சாவழி மக்களும், தேனி மாவட்டத்தை சார்ந்த மலைவாழ் நாயகியான கண்ணகி தேவியின் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார தேனி மாவட்ட பட்டி,தொட்டி வாழ் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி நடைபெறவிருக்கும் யாக யூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலய பாதுகாப்பு அறக்கட்டளையின் உட்பிரிவில் இயங்கும் ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் பி.எஸ்.கனகராஜ், மாநிலத் துணைத் தலைவர்கள் ஹரிஹரன், எஸ்.பாப்பையா ரவி உள்ளிட்டோர் கண்ணகி தேவியின் "யாகபூஜை"யில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்கண்ட கண்ணகி மலைக்கோயிலின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாநில துணைத் தலைவர் எஸ்.பாப்பையா ரவி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம், துணை இயக்குனரிடத்தில் கோரிக்கை மனுவாக நேரில் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள், கண்ணகி தேவியின் பக்தர்கள், ஆலய பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பலதரப்பட்ட இந்து அமைப்புகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மேற்கண்ட கோரிக்கையினை நிவர்த்தி செய்து கொடுத்திட வேண்டி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.