நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் - தெள்ளாறு ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை!

சென்னை பேருந்து வந்தவாசி வழியாக கீழ்ப்புத்தூர் கிராமத்திற்கு மீண்டும் இயக்க வேண்டும் என தெள்ளாறு ஒன்றியக்குழு கூட்டத்தில் பாமக உறுப்பினர் தசரதன் கோரிக்கை வைத்தார்.

நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட வேண்டும் - தெள்ளாறு ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு  ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றிய குழு உறுப்பினர் கீழ்பத்தூர் தசரதன் பேசுகையில், சென்னை பேருந்து வந்தவாசி வழியாக கீழ்ப்புத்தூர் கிராமத்திற்கு இயக்கப்பட்டது. தற்போது அந்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். 

வந்தவாசி செல்லும் விவசாயிகள் புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் செல்லாமல் அணுகுச் சாலையிலேயே திரும்பிவிடுவதால் மிகுந்த சிரமத்திற்கு  உள்ளாகிறார்கள். இதை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.பெரும்பாலான அரசு அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய குழு உறுப்பினர்  தீபா வெங்கடேசன் பேசுகையில், கொடியாலம், தெரேசாபுரம் கிராமத்தில் சுடுகாட்டு பாதையை சீரமைக்க வேண்டும். ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கூட்டத்தில், வட்டார மருத்துவ அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர், கால்நடை துறை மருத்துவ அலுவலர், செய்யாறு வனச்சரக அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார குழந்தைகள் நல அலுவலர், ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சமூக நல விரிவு அலுவலர், தெள்ளாறு காவல் ஆய்வாளர், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.

இந்த கூட்டத்தில்,பிடிஓ ராஜன் பாபு, ஸ்ரீதர் மற்றும் ஒன்றிய குழு துணைத் தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி, துணை பிடிஓ பாண்டியன், அலுவலர் இக்பால், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி, சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

- செய்தியாளர் மூர்த்தி, திருவண்ணாமலை
நிழல்.இன் / 8939476777