ஈரோடு மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கலைஞரின் சிலையை திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்கள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வந்தார் அப்போது ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் ஈரோடு நோக்கி வந்த முதல்வருக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார்.
அரசுதுறை சார்பில் 261 கோடி 57 லட்சம் மதிப்பிலான 135 முடிவற்ற புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ஆயிரத்து 761 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் , மேலும் 631 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் ஈரோடு தாளவாடியில் 2 கோடி ரூபாய் செலவில் குளிர்பதன கிடங்கும், 10 கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சள் ஏற்றுமதி மையமும் அமைக்கப்படும் என உறுதியளித்தார். வேளாண் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஈரோடு பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஈரோட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார். இவ்விழாவில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் , செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்களும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ஹெச்.கிருஷ்ணன் உன்னி அவர்களும் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா அவர்களும் வரவேற்பு பேச்சாளராக அந்தியூர் எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் எம்.பி க்கள் கணேசமூர்த்தி அந்தியூர் செல்வராஜ் , முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் ஈரோடு மாவட்ட மேயர் நாகரத்தினம் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
நிழல்.இன் - 89394767777