தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல ஏஐடியுசி நிர்வாக குழு கூட்டம் : பரமக்குடி சி.பி.ஐ .கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல ஏஐடியுசி நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பணியாலர்களுக்கு தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டதற்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல ஏஐடியுசி நிர்வாக குழு கூட்டம் : பரமக்குடி சி.பி.ஐ .கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பெருமாள் கோவில் அருகே உள்ள சி.பி.ஐ.கட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல ஏஐடியுசியின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் முருகேசன் அறிக்கை சமர்ப்பித்தார். மண்டல  கவுரவத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் இராமச்சந்திரன், இராமநாதபுர மாவட்ட ஏஐடியுசி பொதுச்செயலாளர் என்.கே.ராஜன் போக்குவரத்து கழக மாநில நிர்வாகி மணவழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர். நிர்வாகிகள் பேரானந்தம் விஜயசுந்தரம், குமரேசன், ரமேஸ் பாபு, கோவிந்தையன், கார்மேகம், ஞானபிரகாசம், சிவக்குமார், ஆனந்தன், அஜித் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தீபாவளி போனஸ் கொரோனா காலத்திற்கு முன்பு வரை 20% ரூ.16,800 பெற்று வந்த நிலையில் தற்போது தொழிற்ச் சங்க பிரதிநிதிகளை கலந்து ஆலோசிக்காமல் 10% ரூ. 8,400 என்று அரசு அறிவித்து இருப்பது தொழிலாளர் விரோத செயலாகும் என நிர்வாகக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

ஒட்டுநர் நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. அரசு உடனடியாக புதிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் இல்லாமல் ஒவ்வொரு பணிமனைகளிலும் தினமும் சுமார் ஐந்து பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுவதால், கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதால், படிக்கட்டில் நின்று ஆபத்தான பயணம் செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் பணி செய்யும் பணிமனைகளில் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதில்லை. பணிமனைகளில் சுற்றுச்சுவர்கள் பழுதடைந்து திறந்த வெளியாக கிடப்பதால், நாய்கள் உள்பட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால், தொழிலாளர்கள் அச்சத்தோடு பணி செய்யும்  சூழ்நிலையில் உள்ளனர் . நிர்வாகம் இவற்றை சரி செய்து நடவடிக்கை எடுக்க தவறினால் பணிமனை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777