சொத்து வரி வீட்டு வரி உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும் : புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்
தமிழக அரசு சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வை கைவிட வேண்டும். மத்திய அரசு உணவு பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட முதல் மாநாடு முதல் அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் வரதராஜன் கொடியேற்றி வைத்தார்.
முன்னாள் மாமன்ற உறுப்பினர் கொண்டலாம்பட்டி மண்டல செயலாளர் ரமணி அஞ்சலி தீர்மானம் முன்மொழிந்தார். யூடியூசி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ஹரிஹரன் மாநாட்டு துவக்க உரை நிகழ்த்தினார். மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாநில இணை ஒருங்கிணைப்பாளரான ஆ.ஜீவானந்தம் வேலை அறிக்கையை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து விவாதம் மற்றும் தொகுப்புரையும், வரவு செலவு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர் ஆனந்தம் மீண்டும் மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்ந மாநாட்டில் இணை ஒருங்கிணைப்பாளர் ராஜா (எ) என்கின்ற ஆசிர்வாதம், யூடியூசி மத்தியக்குழு உறுப்பினர் வெற்றி குமார், தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் புகழேந்தி, திருச்சி மாவட்ட செயலாளர் செபாஸ்டியன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆர்ஒய்எப் மாநில தலைவர் முருகானந்தம், மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டு தீர்மானங்கள் : மத்திய அரசு அரிசி பருப்பு எண்ணெய் தயிர் போன்ற உணவு பொருட்கள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.
நாள்தோறும் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு சொத்துவரி மற்றும் வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். சேலம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை அமைத்து வீடு கட்டி நீண்ட காலமாக வசித்து வரும் மக்களுக்கு பாகுபாடு இன்றி பட்டா வழங்க வேண்டும். சேலம் அயோத்தியாபட்டணம் மாசிநாயக்கன்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- செய்தியார் கா.தங்கதுரை, சேலம்
நிழல்.இன் / 8939476777