மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் அளித்தனர்!

பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பாக உயர் ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் அளித்தனர்!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளான கடந்த 16ம் தேதி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பழவேற்காடு மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பாக சங்கத் தலைவர் துரை.மகேந்திரன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் கி.சம்பத் தலைமையில், சங்க நிர்வாகிகள் துரைராஜ், லட்சுமணன், எத்திராஜ், நூர்தின், ஷேக் தாவூத், விஜி ஆகியோர் முன்னிலையில்  உயர் ரத்த அழுத்த பரிசோதனை கருவி, ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் இ.முகமது ஃபாத்திமாவிடம் வழங்கினர்.

நிழல்.இன் / 8939476777