இராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் புறக்கணிப்பு!
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப் பணிகள் நடைபெறுவதில் பேருராட்சி தலைவர் முறைகேடு செய்திருப்பதாக பேரூராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார் பட்டி பேரூராட்சியில் திட்டப் பணிகள் நடைபெறுவதில் பேருராட்சி தலைவர் முறைகேடு செய்திருப்பதாக பேரூராட்சி துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர்.
கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த நிலையில் மீண்டு பேரூராட்சி கூட்டம் கூட்டப்பட்டதில், துணை தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொள்ளவில்லை. அதனால் பெரும்பான்மை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் போனது. பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டதால், நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது என செயல் அலுவலர் சந்திரகலா தெரிவித்தார்.
தலைவர் மற்றும் துணை தலைவர் இடையே நடைபெற்று வரும் மோதல் மக்களின் அடிப்படை வசதிகளை பாதிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777