விபத்தில்லா தீபாவளி கொண்டாட பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிய தீயணைப்பு துறையினர்!
விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத் துறையினர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் சார்பில் நிலை அதிகாரி சீனிவாசன் தலைமையில் இராஜபாளையத்தில் உள்ள பொது மக்களுக்கும் கடைகளுக்கு நேரடியாக சென்று இந்த தீபாவளியை விபத்து இல்லா தீபாவளியாக எப்படி கொண்டாடுவது என்பது குறித்தும் பாதுகாப்பாக பட்டாசு எப்படி வெடிப்பது/குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777