ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!

ஒன்றை மாதத்திற்கு முன்பு கண்டெய்னர் லாரியில் இருந்து 8 டன் காப்பர் மற்றும் இரும்புகளை திருடியவர்கள், தற்போது திருவொற்றியூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!
ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!
ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!
ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!
ஒன்றரை மாதத்திற்கு முன்பு காணமல் போன 8 டன் இரும்பு காப்பரை கண்டுபிடித்த காவல்துறையினர்!

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். திருவொற்றியூரில் உள்ள கண்டெய்னர் யார்டில் இரும்பு பித்தளை காப்பர் அலுமினியம் போன்றவற்றை மொத்தமாக வாங்கி கண்டெய்னரில் ஏற்றி டெல்லி ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பிவைப்பது வழக்கம்.

இதே போன்று கடந்த மாதம் 8ம் தேதி அன்று இரவு சுமார் 28,400கிலோ மொத்தமாக கண்டெய்னரில் ஏற்றி சீல்வைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை கண்டெய்னர் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து எடைமேடைக்கு கொண்டு சென்று எடை பார்த்ததில் சுமார் 8,400 கிலோ காப்பர் இரும்புகள் குறைவாக காட்டியுள்ளது.பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

புகாரை பெற்று கொண்ட திருவொற்றியூர் குற்றபிரிவு ஆய்வாளர் விசாரணை செய்து வந்ததில், திருடியது அதே பகுதியை சேர்ந்த அனில்குமார், நரேன்குமார் கிருஷ்ணன், ரவி, ஹேமன்பாபு என தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலிசார் அவர்களிடமிருந்து 6 டன் காப்பர் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம், திருட பயன்படுத்திய ஒரு வாகனம் அனைத்தையும் பறிமுதல் செய்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

புகார் கொடுத்து ஒன்றரை மாதங்கள் ஆகிய நிலையில், திருடியவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் திரூவொற்றியூர் காவல்துறையினர்.

நிழல்.இன் - 8939476777