இராஜபாளையம் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை அழைக்க சென்ற காவலருக்கு அரிவாள் வெட்டு!
கருத்து வேறுபாட்டினால் பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை சமாதானப்படுத்தி அழைக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில், காவலருக்கு அரிவாள் வெட்டு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள 11ம் அணி காவல் சிறப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார் கபில்ராஜ் (25).
இவருக்கு இதே ஊரைச் சேர்ந்த ஜோதிகா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த நான்கு மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கபில்ராஜும் ஜோதிகாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஜோதிகா தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக காவலர் கபில்ராஜ் சென்ற பொழுது, ஜோதிகாவின் உறவினரான கனகராஜ் என்பவருக்கும் கபில்ராஜுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில் கனகராஜ் தகாத வார்த்தையால் பேசியபொழுது, இருவருக்கும் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது கனகராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கபில்ரானை வெட்டியதில், கழுத்து மற்றும் கைப்பகுதியில் பலத்த காயங்களுடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777