காவல்துறை அதிகாரிகளின் சிறப்பான பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட எஸ்.பி.
தேனி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் ஆள்நர்கள் ஆகியோரின் சிறப்பான பணியை பாராட்டி அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கிய கெளரவப்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ்.

தேனி மாவட்டத்தில்,போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தனிப்படையினர் மற்றும் காவல் நிலைய காவல்துறையினரைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கினார். அதேபோல், பெரியகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை விற்பனையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக கண்காணித்து அதிரடியாக கைது செய்து,போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் ஒளிரும் விளக்குகளை அமைத்த தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் பணியை பாராட்டியும், தேனி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரின் சீர்மிகு பணியை பாராட்டி கடந்த 9ம் தேதியன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் நற்சான்றிதழ் வழங்கி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கெளரவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலானது, தேனி மாவட்ட வாழ் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
சுகன்யா முரளிதரன் - செய்தியாளர், தேனி.