சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள அருள்மிகு ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி திருமஞ்சனம் நடைபெற்று பின் மாப்பிள்ளை மண்டபத்தில் வீற்றிருந்தார். சீர் வரிசைகளை சுமந்து நான்கு ரத வீதிகளில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்று, சீதாராமன் என்ற ஸ்ரீபதி மாப்பிள்ளை வீட்டாராகவும் கிருஷ்ணஹரி என்ற பரதன் பெண் வீட்டாராகவும் மாலை மாற்றி மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. 

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா, கோவில் பணியாளர் முரளிதரன், அர்ச்சகர் ஸ்ரீபதி, உதவி அர்ச்சகர் ரகுராம் உள்ளிட்டோர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

- செய்தியாளர் வி.காளமேகம், மதுரை
நிழல்.இன் / 8939476777