தூத்துக்குடி மாவட்டமாக உதயமான நாள் : வரலாறு சொல்லும் அரசு பள்ளி ஓவிய ஆசிரியை
தூத்துக்குடி மாவட்டமாக உதயமான நன்னாள் மாவட்டத்தின் வரலாற்றை ஓவியம் வரைந்து சிறப்பு செய்த அரசு பள்ளி ஓவிய ஆசிரியை ஜெயபாரதி.

தூத்துக்குடி மாவட்டம் பிறந்த நன்னாள் அறிந்து, ஆறுமுகனேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியையும், குழந்தைகளிடம் மட்டுமல்லாது சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் "சேவை கனல்" சு.ஜெயபாரதியிடம் மாவட்ட உதயம் குறித்து கேட்டபோது, "முன்னொரு காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளடக்கியது தூத்துக்குடி. தூத்துக்குடி என்ற உடன் செக்கிழுந்த வ.உ.சி.யின் நினைவு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கண்ணை மூடிக்கொண்டு சொல்வர். நகரின் வளர்ச்சியும், மக்களின் வளர்ச்சியாலும் 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருநெல்வேலியிலிருந்து பிரித்து தூத்துக்குடி உதயமான நன்னாள்.
இம்மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே இருக்கலாம்.
பல தியாகிகள், கவிஞர்களை தந்த மாவட்டம் இது. அது தவிர 5 வகை நிலங்கள் உள்ளது. உப்பு, மீன் பிடித்தொழில், சிப்காட், தெர்மால், விவசாயம், பதப்படுத்தும் தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் உள்ளது. தமிழ் நாட்டின் நுழைவு வாயில் தூத்துக்குடி.
இம்மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி குட்டி ஜப்பான் எனப்படும் சிறப்பு பெற்றது. தமிழகத்தில் முத்துக்குளித்தலுக்கு பெயர் போனது. 10வது துறைமுகம் ஆகும். வெற்றிலை, கருப்பட்டி போன்ற வணிகத்திற்கும் சிறப்பு பெற்றது. திருச்செந்தூர் நவதிருப்பதி, நவகைலாயம்,, போன்று சிறப்பு வாய்ந்த ஆன்மிக ஸ்தலங்கள் அமைந்தது.
ஆதிச்சநல்லூர், கொற்கை, கழுகுமலை போன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அமைந்து இருப்பதால் சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள், வடமாநிலத்தவர்கள் என மக்கள் எந்நாளும் வந்து செல்லக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம்.
கட்டபொம்மன், அழகுமுத்து கோன், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், வெள்ளைய தேவன் போன்ற விடுதலை வீரர்கள் பெற்ற மாவட்டமாகவும் திகழ்கிறது. தமிழநாடக உலகின் முடிசுடா மன்னன் சங்கரதாஸ் சுவாமி, இசை மும்மூர்த்தி முத்துசுவாமி தீர்ச்சிதர் போன்றவர்கள், மகாகவி பாரதியார் பிறந்த எட்டையபுரம் இந்த மாவட்டத்தின் பெருமைகளுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
மாவட்டத்தின் பெருமைகளை தனக்கே உரிய பாணியில் வண்ண ஓவியத்தால் படம் வரைந்தும் சுட்டிகாட்டி தெளிவு படுத்தினார். சிறு குழந்தைகள் முதல் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சேவை மனப்பான்மையும், உள்ளமும் கொண்ட அரசு பள்ளி ஓவிய ஆசிரியை சு.ஜெயபாரதியை பள்ளியினர் அனைவரும் பாராட்டினர்.
- சிறப்பு செய்தியாளர் மாமுஜெயக்குமார்
நிழல்.இன் / 8939476777