திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது.

திருவண்ணாமலை அடுத்த புனல் காடு காட்டுப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடிய இரண்டு நபர்களை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய இருவர் கைது.

திருவண்ணாமலை அடுத்துள்ள  காப்பு காடு பகுதியில் காப்புக்காடு மற்றும் திப்பக்காடு ஆகிய பகுதியில் சிலர் காட்டுப்பன்றியை வேட்டைடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

அதிகாலை 3 மணி அளவில் வனச்சரகர் சீனிவாசன் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட குழுவினர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடமாத்தூர் கிராமத்தில் காப்பு காட்டு பகுதியில் கம்பி வலைகளை கொண்டு காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய திருமலை, சாமிகண்ணு ஆகிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

அவர்களிடமிருந்து 10 கிலோ காட்டுபன்றி இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய கம்பி வலைகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

- செய்தியாளர் மூர்த்தி, திருவண்ணாமலை
நிழல்.இன் / 8939476777