பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!

பொன்னேரியில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!
பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க கோரி பொன்னேரி நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி துணை தலைவர், வார்டு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளால் சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் கூறி பொன்னேரி நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், வார்டு கவுன்சிலர்களுடன் சேர்ந்து நகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சாலைகளை சீரமைக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்து தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தினை கைவிடக்கோரி பொன்னேரி நகராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.