சிறப்பு மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடை இனிப்பு வழங்கிய வேதாரண்யம் எஸ்.எஸ்.அறக்கட்டளை!
வேதாரண்யம் அருகே நெய்விளக்கு கிராமத்தில் உள்ள பகல் நேர சிறப்பு மாற்றுத்திறன் ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் சிறப்பு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வேதாரண்யம் S.S.அறக்கட்டளை மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், நெய்விளக்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள SSA சமக்ரசிக்ஷா, ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் இயங்கிவரும் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கான பகல்நேர ஆயத்த பயிற்சி மையத்தில் பயிலும் சிறப்பு பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் தொண்டுள்ளம் கொண்ட வேதாரண்யம் எஸ் எஸ் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு புத்தாடை இனிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சிறப்பு பயிற்சி பெறும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் விழா நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி தலைமையில் நடைப்பெற்றது.
சமக்ரசிக்ஷா ஓங்கிணைந்த பள்ளிக்கல்வி ADPC D.சாந்தி, வட்டாரக்கல்வி அலுவலர்கள் K.இராஜமாணிக்கம், வீ.இராமலிங்கம் ஆகியோருக், வேதாரண்யம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ப.அசோக்குமார், ஆசிரியப்பயிற்றுநர் அருள்மணி, S.S.அறக்கட்டளை தலைவர் S.S.தென்னரசு, செயலாளர் மல்லிகா தென்னரசு, தோப்புத்துறை இந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கவிஞர் புயல் குமார் என்கிற சு.தெட்சிணாமூர்த்தி, நெய்விளக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை N.செல்வராணி, நெய்விளக்கு ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா தருமராசன், பள்ளிமேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து நிலை சிறப்பு பயிற்றுநர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் அதன் முக்கியத்துவம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்கள். சிறப்பு பயிற்சி பெறும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் S.S.அறக்கட்டளைக்கு அனைவரது சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- செய்தியாளர் நா.மணிவண்ணன்
நிழல்.இன் / 8939476777