அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ் 12ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? - சின்னமன்னூரில் நடந்த ஆலோசனை நிகழ்ச்சி

அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற துறைகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து முதலமைச்சர் தொடங்கிவைத்த ‘நான் முதல்வன்’ திட்டம் தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நடைபெற்றது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ் 12ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? - சின்னமன்னூரில் நடந்த ஆலோசனை நிகழ்ச்சி

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளையம்மாள்புரம், அரசு கள்ளர் மேல் நிலை பள்ளியில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும்  சென்ற ஆண்டு மேல்நிலைப்பள்ளி படித்து முடித்தவர்கள், இந்த ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும்  வரவழைத்து தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் career guidance நிகழ்வு மூலமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

ஆலோசனையில், 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு முன்னர் எந்தப் படிப்பினை எந்தக்கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம் என்பது குறித்தும், மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் இணைந்து https://naanmudhalvan.tnschools.gov.in/home இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

மேலும்,பள்ளிக்கல்வித்துறையில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கும், அதன் பின்னர் தங்களுக்கான பணிகள் எங்கு கிடைக்கும் என்பது குறித்து தெளிவான விளக்கம் தெரியாமல் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில், தாங்கள் விரும்பும் படிப்பு எந்ததெந்த கல்லூரிகளில் உள்ளது என்பது குறித்தும், அந்தப் படிப்பில் சேர தேவையான கல்வித்தகுதிகள், கட்டண விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் குறித்தும் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 

ஆலோசனை நிகழ்வு குறித்து, சின்னமனூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் பயிற்றுநர்களிடத்தில் கேட்டபோது, “நமது நாட்டின் எதிர்காலம்,பள்ளி வகுப்பறைகளில் நிர்ணயிக்கப்படுகிறது.தனிப்பட்ட மக்களுக்கு நன்மை பயப்பதுடன், சமூக மறுமலர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்துக்கும் கல்வி இன்றியமையாதது. வாழ்க்கை முன்னேற்றத்திற்குக் கல்வியே முதல்படி.வசதி வாய்ப்புகள் குறைந்த ஏழை மாணவர்கள், பொருளாதார அடிப்படையில் முன்னேறுவதற்கும், வேலையைப் பெறுவதற்கும் உயர் கல்வியே வழி செய்கிறது.

மேலும்,12ஆம் வகுப்புக்குப் பிறகு தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள, பல்கலைக்கழகங்களிலோ, கல்லூரிகளிலோ, வேறு உயர்கல்வி நிலையங்களிலோ உயர் கல்வியைப் பெறலாம். இப்போது எந்தப் படிப்பைப் படித்தாலும் படித்து முடிக்கும் முன்பே வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய மாணவர்களின் விருப்பமாக உள்ளது. 


 
12ஆம் வகுப்பு இறுதியில் மாணவர் பெறும் மதிப்பெண்களும், அல்லது நுழைவுத்தேர்வில் மாணவர் பெறும் மதிப்பெண்களும் அதைத்தொடர்ந்து கல்லூரிகளில் சேரும் படிப்புகளுமே மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.எனவே, படிப்புகளைத் தேர்வு செய்வதிலும் கல்லூரிகளைத் தேர்வு செய்வதிலும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

தங்களது திறமைகளைக் கண்டறிந்து,அந்தத் துறைகளில் அறிவைச் செலுத்திப் படிப்பவர்களே வெற்றி காண்கின்றனர். மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கும், திறமைக்கும் ஏற்ற துறையை தேர்ந்தெடுங்கள்” என கூடியிருந்த மாணவர்களுக்கு விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது என தெரிவித்தனர். 

இந்நிகழ்வை பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார். நிகழ்ச்சியில் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.