திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் திடீரென மணப்பெண்ணுக்கு காதலன் தாலி கட்ட முயன்றதால் பரபரப்பு...

வட சென்னையில் கோவிலில் திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் திடீரென மணப்பெண்ணின் காதலன் தாலி கட்ட முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காதலன் போலீசில் ஒப்படைப்பு.

திருமணம் நடைபெற  இருந்த சமயத்தில்  திடீரென மணப்பெண்ணுக்கு காதலன் தாலி கட்ட முயன்றதால் பரபரப்பு...

வடசென்னை தண்டையார்பேட்டை  நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும், ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில்  வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும், நேதாஜி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. அப்போது இருவீட்டாரும் அதிக அளவில் திருமணத்திற்க்கு திரண்டு வந்து மணமக்களை வாழ்த்த காத்திருந்தனர்.

இந்நிலையில், மணமகன் மணிகண்டன்  தாலி கட்டும் நேரத்தில், திடீரென திருமணத்திற்கு வந்திருதவர்கள் கூட்டத்தில் இருந்து ஒரு இளைஞர் ஓடிவந்து மணிகண்டன் கையில் இருந்த தாலியை பிடுங்கி ஓடிபோய் மணமகளின் கழுத்தில் கட்டுவதற்க்கு முயன்றார். 

அப்போது திருமணதிற்கு வந்திருந்த உறவினர்கள் உடனே அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பெயர்  சதீஷ் ( 25) என்பதும், அவர் மணமகளை ஒரு தலையாய் காதலித்ததும் தெரியவந்தது. பின்னர், உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சதீஷை காவல் துறையினரிடம் ஒப்படைக்கவே  சதீஷிடம் போலீசார்  விசாரணை நடத்தினர்.

சதீஷும் மணப்பெண்ணும் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மணப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படவே, மணமகள்
தன் காதலன் சதீஷை திருமணத்திற்கு வரவழைத்து உள்ளார். இந்த சூழலை பயன்படுத்தி,  சதீஷ் தன் காதலிக்கு தாலி கட்ட முயற்சி செய்து உள்ளார். 

மணமகளுக்கு தாலி கட்டும் போது அதை காதலன் என  கூறப்படும் நபர் தாலியை 
சினிமா பட பாணியில் கட்ட முயன்ற  நடைபெற்ற இச்சபவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

- செய்தியாளர் சீனிவாசன், திருவொற்றியூர்
நிழல்.இன்-8939476777