சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை.

ராஜபாளையம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்தது திருவில்லிப்புத்தூர் போக்ஸோ நீதிமன்றம்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 2 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளைம் அருகேயுள்ள தொம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் (45), வெங்கடேஷ்பாபு (43). நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை சிவக்குமாரும், வெங்கடேஷ்பாபுவும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்தனர். 

இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், குற்றவாளிகள் சிவக்குமார், வெங்கடேஷ்பாபு இருவருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

- செய்தியாளர் வி.காளமேகம்
நிழல்.இன் / 8939476777