மதுரை மாநகராட்சியில்,திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய மூன்று சக்கர சைக்கிள்களை, மேயர் வ.இந்திராணி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சியில்,திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய மூன்று சக்கர சைக்கிள்களை, மேயர் வ.இந்திராணி பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி செல்லூர் வாகன காப்பகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 342 காம்பேக்டர் குப்பை தொட்டிகளை, மேயர் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர். கா.ப.கார்த்திகேயன், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , துணை மேயர் தி.நாகராஜன், பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகளை வீடுகள்தோறும் சேகரிப்பு செய்வதற்கு 15வது மத்திய நிதிக்குழு (2020-2021) திட்டத்தின் கீழ் 200 புதிய மூன்று சக்கர சைக்கிள்கள் ரூ.59.80 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இவற்றை, மேயர், ஆணையாளர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துணை மேயர் ஆகியோர் கொடியசைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று முதல் துவக்கி வைத்தார்கள்.