இராஜபாளையம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்தில், அரசு அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்ட
இராஜபாளையம் ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்தில், அரசு அதிகாரிகள் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒன்றியக்குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் (சேர்மன்) சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில்தான் துணை தலைவர் துரை கற்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாறுகால் சரிவர அனைத்து குப்பைகள் தேங்கி உள்ளதாகவும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்வதாகவும் பலமுறை பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை குழந்தை தலைவர் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என 15வது வார்டு கவுன்சிலர் பகத்சிங் தெரிவித்தார் . இதை தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர் மாடசாமி எங்களுடைய செயல்பாடு சரியில்லாமல் தான் உங்களுக்கு மக்கள் ஆட்சியில் பொறுப்பு அளித்துள்ளனர் ஆனால் நீங்கள் பொறுப்புடன் செயல்பட வில்லை நாங்கள் எந்த ஒரு கோரிக்கை எடுத்துச் சென்று அரசு அதிகாரிகளும் சென்றாலும் அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்து கின்றனர்
என குற்றம் சாட்டினார் .மேலும் தங்கள் பகுதியை தேவையான சாலை வசதி குடிநீர் வசதிகளை செய்து தர வேண்டும் ரேஷன் கடைகள் போன்றவை பழுதுபார்த்து புதுப்பித்தல் வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்தனர் .
தொடர்ந்து பேசிய கவுன்சிலர் முத்துலட்சுமி பேசும்பொழுது சமூகநலத்துறை அதிகாரி இரண்டு பெண் குழந்தைகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை எடுத்துச் சென்றால் அலட்சியமாகவும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார் புரோக்கர்களை வைத்துக் கொண்டு அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கவுன்சிலில் கொடுக்காமலும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார் தொடர்ந்து பேசிய மன்றத் பெருத்தலைவர் சிங்கராஜ் கூறும்போது ஏற்கனவே இந்த அதிகாரிகள் பல குற்றச்சாட்டுகள் மக்கள் கொடுத்துள்ளர் ஆகையால் கட்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்தார் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரி அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தார் .அரசு அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதால் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால் அதிகாரிகள் தங்கள் பணிகளை சரிவர செய்ய வேண்டும் இல்லாட்டி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
வி.கா ளமேகம் - செய்தியாளர் : நிழல் . இன் – 8939476777